November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எம்சிசி உடன்படிக்கையில் உள்ள சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது’

அமெரிக்காவுடன் கைச்சத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள ‘மிலேனியம் செலேஞ் கோப்ரேஷன்’ (எம்சிசி) உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக நாட்டில் எழுந்த எதிர்ப்பு நிலைமைகளால் அந்த ஒப்பந்தம் அப்போது கைச்சாத்திடப்படவில்லை.

இதனை தொடர்ந்து தற்போதைய அரசாங்கம் அந்த உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்த குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த அறிக்கை ஆராய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி அந்த அறிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர், எம்சிசி ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளார்.