May 15, 2025 14:30:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையில் முதல் கட்டமாக 18 வயதிற்குக் குறைந்த எவருக்கும் தடுப்பூசி வழங்க முடியாது”

File Photo: Facebook /Pirasanna Ranathunga

கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுமக்களின் 52 வீதமானவர்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் இதில் 18 வயதிற்குக் குறைந்த எவருக்கும் தடுப்பூசி வழங்க முடியாது எனவும் அவர் கூறினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் 20 வீதமானவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. எனினும் தடுப்பூசி குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் எதனையும் முன்வைக்காத நிலையில் இத் தீர்மானம் இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்து அந்த குழு இப்போது தடுப்பூசி தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் தடுப்பூசிகளில் 20 வீதம் இலவசமாகக் கிடைக்கின்றது எனவும் ஏனைய தொகையை விலைகொடுத்துப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.