January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு விடயங்களில் தேசிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டியுள்ளது’

இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு விடயங்களில் சாதாரண தேசிய சட்டங்கள் இயற்றப்படாததே ரஞ்சன் ராமநாயக்க தண்டிக்கப்படக் காரணமென்றும், அது தவறான எடுத்துக்காட்டாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததைப் போன்ற கூற்றுகள் ஆங்கில சட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பாகக் கணிக்கப்படுவதில்லை என்பதைப் பொருட்படுத்தாதுமே, அவரது விவாகரத்தில் இவ்வாறான தீர்ப்பொன்று வழங்கப்படக் காரணமென்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கில் தானே ஆஜராகியிருந்ததாகவும், நேர்மையான அரசியல்வாதிக்காக நீதிமன்றில் ஆஜரானதை எண்ணி பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் முறையான சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினாலேயே ரஞ்சன் ராமநாயக்க தண்டிக்கப்பட்டதாகவும், இந்த விடயத்தில் பாராளுமன்றமே பொறுப்புக் கூறவேண்டம் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மிக நீண்ட காலமாக இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு விவகாரங்களில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய கட்டாய தேவையிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பின் 125 ஆம் சரத்தை அனைவரும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.