இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி விநியோகிப்பதற்குத் தேவையான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகத் தடுப்பூசியைப் பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் முதல் கட்டமாக வழங்க எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நான்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு, பொருத்தமான தடுப்பூசி மற்றும் தடுப்பூசிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பௌதீக பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.