May 25, 2025 10:08:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமானப்படைக்கு இந்தியா வான் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைப்பு

இலங்கையின் விமானப்படைக்கு இந்திய அரசாங்கம் வான் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண உத்தியோகப்பூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியா அரசாங்கம் இலங்கையின் விமானப்படைக்கு வான் பாதுகாப்பு உபகரணங்கள் தொகையொன்றையும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிப் பாகங்களையும் வழங்கி வைத்துள்ளது.

இந்த நிகழ்வு கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விமானப்படை பொறியியல் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கையின் பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் விமானப் படைத் தளபதி, இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லேவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி, கௌரவித்துள்ளார்.