January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மின் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 6 மாத சலுகைக் காலத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்போருக்கே இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றுக்கும் இந்த சலுகைக் காலத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதி வரையில், மின்சார கட்டணத்தை செலுத்ததவர்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.