January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்கள் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி

நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆணைக்குழுவினர் அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களில் பல்வேறு பதவிநிலைலகளில் இருந்தவர்கள், ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸார் எதிர்நோக்கிய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அது தொடர்பான தீர்மானங்களையும், பரிந்துரைகளையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இந்த தீர்மானங்களையும், பரிந்துரைகளையும் செயற்படுத்துவதற்காக நேற்றைய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.