Photo: Facebook/ Colombo Stock Exchange
கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு நேற்று உயர்வடைந்துள்ளது.
நேற்றைய பரிவர்த்தனை முடிவில், அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி 7,922.66 புள்ளிகளாக காணப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2011 பெப்ரவரி 14 ஆம் திகதியன்று மிக உயர்வான விலைச் சுட்டி பதிவாகியிருந்தது. அப்போது அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி 7,811.80 புள்ளிகளாக ஆகக் காணப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நேற்றைய தினம் உயர்வான விலைச் சுட்டி பதிவாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய நாளின் பதிவை விடவும் 188.09 புள்ளிகள் அதிகரிப்பாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினத்தில் 67,000 க்கும் மேற்பட்ட பங்குப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் இடம்பெற்ற அதிகப்படியான பங்கு பரிவர்த்தனையாகவும் பதிவாகியுள்ளது.