May 25, 2025 11:30:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வங்கியின் பணிப்பாளர் குழுவில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமனம்

photo: Facebook/bandaranaike international airport

இலங்கை வங்கியின் பணிப்பாளர் குழுவில் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இவர் டிசம்பர் 2019 முதல் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.