January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து அணியின் ஒற்றை ரசிகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட ஜோ ரூட்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆட்டத்தைப் பார்வையிட 10 மாதம் இலங்கையில் தங்கியிருந்த ஒற்றை ரசிகனுக்கு அணித் தலைவர் ஜோ ரூட் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து கிரிகெட் அணியின் சுற்றுப் பயணம் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ரோபி லூவிஸ் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்துள்ளார்.

10 மாதத்திற்குப் பின்னர் ரோபி லூவிஸ் இங்கிலாந்து அணியின் அதிரடி டெஸ்ட் ஆட்டத்தைப் பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

முதல் நாள் போட்டியை காலி கோட்டை இருந்து பார்வையிட்ட ரோபி லூவிஸை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இரண்டாம் நாள் போட்டியைப் பார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், இன்று இங்கிலாந்து முதல் வெற்றியைப் பதிவுசெய்த பின்னர் அணித் தலைவர் ஜோ ரூட் ஒற்றை ரசிகன் ரோபிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.