May 24, 2025 17:42:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் அனுராதபுரத்தில் கைது!

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அனுராதபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் 43 வயதுடைய அதிகாரி ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான 5 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.