July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச முதலீட்டாளர்கள் இன்றி இலங்கையைக் கட்டியெழுப்ப முடியாது’

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானம் ஆரோக்கியமானதாகும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் தாம் ஆட்சியில் இருக்கும் போது, இலங்கையின் அபிவிருத்திக்கு சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள முயற்சிக்கையில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும், விற்பனை செய்யும், தேசத் துரோக செயல் என பிரச்சாரம் செய்தவர்கள் இன்று சிக்கிக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அப்போது கூறிய பொய்களின் காரணமாக, இன்று நல்ல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது, பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தியின் பக்கம் திருப்ப வேண்டும் என்றால், அதில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைந்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரம்பம் முதலே நட்டத்தில் இயங்கிய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், குறுகிய காலத்தில் இலாபத்தை அடைந்துகொண்டது சர்வதேச முதலீட்டாளர்களுடன் கைகோர்த்ததால் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.