May 28, 2025 19:58:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இலகு வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கையின் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை அணி முதல், இரண்டாவது இன்னிங்ஸ்களில் முறையே 135 மற்றும் 359 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தது.

இதற்கமைய, இங்கிலாந்து அணி 74 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி, போட்டியின் 5 ஆவது நாள் காலைப் பொழுதிலேயே வெற்றியைப் பதிவுசெய்துகொண்டது.

இலங்கையில் இங்கிலாந்து அணி இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.