இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவருக்கும் இராணுவ பயிற்சியை வழங்குவதற்கான யோசனையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் இவ்வாறாக பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும், அதனூடாக அந்த நாடுகள் சில நன்மைகளை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ பயிற்சிகள் மூலம் சட்டத்தை மதிக்கும், ஒழுக்கம் மிக்க சமூகத்தை உருவாக்க முடியுமாக இருக்குமென்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் நலன் கருதியே இந்த யோசனையை முன்வைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.