January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா, உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து இருவாரங்களுக்குள் இலங்கைக்கு தடுப்பூசிகள்’

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சம் ஒக்ஸ்போர்ட்- ஆஸ்டாசனிக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனமும் ஒரு இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நாம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் உலக பூரண இணக்கத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் எமக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் வழங்கும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்தியா தற்போது 20 மில்லியன் ஒக்ஸ்போர்ட்-ஆஸ்டாசனிக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தமது நேச நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ள நிலையில் இலங்கைக்கும் இந்த தடுப்பூசிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.