File photo
இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரெண்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களே தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எங்கிருந்து, எந்த வகை தடுப்பூசிகளை கொண்டு வருவது என்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பாக சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.