பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட குழுவினர், 5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இலங்கை அரச தலைவர்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று நிலைமையால் அவரின் விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனபோதும், விரைவில் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விஜயத்தின் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.