
twitter/ranil wickremesinghe
ராஜபக்ச அரசை நாட்டு மக்களுக்கு முன் கொரோனாவே தோற்கடித்துவிட்டது என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு திட்டமும் இந்த அரசிடம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நுகேகொடை பகுதியில் இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையர்கள் அனைவருக்கும் மார்ச் மாதம் ஆகும் போது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதாக அரசு உறுதி வழங்கிய போதிலும், அது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘உங்களின் ஆட்சி இருந்திருக்கும் பட்சத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு என்ன செய்திருப்பீர்கள்?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்க புன்னகையுடன் பதில் வழங்கினார்.
“ஒரே நன்மை இருக்கின்றது. அரசிலும் இல்லை. நாடாளுமன்றத்திலும் இல்லை. அப்படியென்றால், ஒன்றும் செய்யத் தேவையில்லை” என்று பதிலளித்தார்.