இலங்கையில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மற்றைய பகுதிகளில் ஜனவரி 25 திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கான தனியார் வகுப்புகளை மீண்டும் தொடங்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்ன இதனை அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது மொத்த இருக்கைகளில் 50 வீதம் இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களும் ஆசிரியர்களும் மாவட்டங்களிடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர், இரண்டு வாரங்கள் கடந்தே தனியார் வகுப்புகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.