மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மன்னார் பொலிஸார் இன்று சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளில் அடையாளம் காணப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களை உரிய சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக முகக்கவசம் அணியாத வர்த்தகர்கள், தொற்று நீக்கிகள் மற்றும் வடிக்கையாளர்கள் கை கழுவுவதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேநேரம், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணி, முககவசங்களை சரிவர அணியாமல் நடமாடும் பொது மக்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.