May 3, 2025 23:16:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் இராணுவத்தினரை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவில் இணைக்கத் தீர்மானம்

இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக விலகிய 200 பேரை சிறைச்சாலைகளில் முக்கிய பதவிகளில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 வருடங்கள் சேவைக் காலத்தின் பின்னர் சட்டப்படி விலகிய 40 வயதுக்கும் குறைந்தவர்களை இவ்வாறு சிறைச்சாலை பதவிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவில் சிறைக்காவலர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.