November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தத்துக்கு ஆலோசனைக் குழு நியமனம்

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து, சட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் குழுவொன்றை நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி நியமித்துள்ளார்.

அத்தோடு, முஸ்லிம் விவாவ, விவாகரத்து சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.

முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 வயதாகத் தீர்மானிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழுவில் தலைவராக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரனி நாமிக் நபாத், ஏ.பீ.எம். அஷ்ரப், சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸீன், அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி, சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹகீம், சட்டத்தரணி எமிஸா தீகல், சட்டத்தரணி எஷ்.எம். ருஷ்தி மற்றும் சட்டத்தரணி சபானா குல் பேகம் ஆகியோர் முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.