பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பொத்துவில் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஊறணியிலுள்ள விடுதியில் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத குழுவினரின் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதி தவிசாளார் விடுதியில் இருக்கும் போது மதிலுக்கு மேலால் ஏறி வந்த இனந்தெரியாத குழுவினர் வாள் மற்றும் பொல்லால் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.