January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அத்தோடு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோ கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.