January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கச்சத்தீவு தேவாலய திருவிழா இம்முறை நடைபெறாது

File Photo: navy.lk

இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை திருவிழாவை நடத்தாது இருப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

வழமையாக பெப்ரவரி மாதங்களில் இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா நடைபெறும்.

இதன்போது இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.

ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையால் இந்த வருடத்தில் திருவிழாவை நடத்தாது இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.