யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவிடத்திற்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவிடம் கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்தழிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், இடித்தழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அந்த நினைவிடத்தை அமைப்பதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா இணக்கம் வெளியிட்டிருந்தார்.
இதன்படி 11 ஆம் திகதி காலை அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், இன்றைய தினம் அத்திவாரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.