July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொஸ்கொட சொகுசு பேருந்தில் 180 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

இலங்கையின் தென் பகுதியான கொஸ்கொடவில் இருந்து 18 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருட்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

காலி- கொழும்பு போக்குவரத்து பாதையில் இயங்கும் சொகுசு பேருந்தில் இருந்தே, இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் இலங்கை மதிப்பு சுமார் 180 மில்லியன் ரூபாவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் கும்பல் தலைவரின் நண்பர் ஒருவரே பேருந்தின் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளதோடு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிந்த சாரதி போக்குவரத்து பாதையில் போதைப்பொருள் விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.