
இலங்கையில் இன்றைய தினத்தில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50,899ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 480 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,747ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6,905 பேரே சிகிச்சைப் பெற்று வருவதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று 4 உயிரிழப்புகள் பதிவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்காமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக உயர்வடைந்துள்ளது.