தெற்காசியாவின் விசாலமான டயர் தொழிற்சாலையை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்துள்ளார்.
ஹொரனை வகவத்த முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெரென்டினோ டயர் தொழிற்சாலையே, இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் டயர்களைத் தயாரிக்கும் இந்தத் திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தில் இங்கு தயாரிக்கப்படும் டயர்கள் ஐரோப்பா உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் பல்வேறு தொழில்வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், அனைத்து அளவுகளிலான டயர்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.