June 15, 2025 5:53:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியை 135 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய இங்கிலாந்து; 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய டொம் பெஸ்

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் 10.1 ஓவர் பந்து வீசிய டொம் பெஸ் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மெதிவ்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் நான்கு வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில், ஆட்டமிழந்துள்ளனர்.

இந்நிலையில், முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் 17 ஓட்டங்களில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

இலங்கை சார்பில் லசித் எம்புல்தெனிய இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.