November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். செம்மணியில் நல்லூர் அலங்கார வளைவு திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில், ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி அலங்கார வளைவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் சம்பிரதாய, பண்பாட்டு சின்னங்களைத் தாங்கியவாறு இந்த அலங்கார வளைவை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

அதன் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றன.

இதன்பின்னர் தைத்திருநாளான இன்றைய தினம், நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில், செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

தவில் நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாரயணம் செய்ய அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.