
இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளின் பயணிகள் இன்றிலிருந்து ஜப்பானுக்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்தே, ஜப்பான் போக்குவரத்துக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா போன்ற நகரங்களில் ஏற்கனவே அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்ததோடு, மேலும் பல நகரங்களுக்கும் அது விரிவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை, தாய்வான், தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்தே, பயணிகள் ஜப்பானுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியான பயணங்களை மேற்கொண்டு ஜப்பானுக்கு வருவோர், ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஜப்பானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 4 ஆயிரம் பேரளவில் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.