July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பூச்சியத்தில் ஆட்டமிழந்த இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடராக ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் இறுதி மூன்று இன்னிங்ஸ்களிலும் பூச்சியத்தில் ஆட்டமிழந்த குசல் மென்டிஸ், இன்று ஆரம்பமான இங்கிலாந்துடனான முதல் இன்னிங்ஸிலும் ஓட்டங்கள் பெறாத நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.

நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடராக ஓட்டங்கள் பெறாமல் ஆட்டமிழந்த மூன்றாவது இலங்கை வீரராக குசல் மென்டிஸ் கருதப்படுகின்றார்.

இதற்கு முன்னர் இலங்கை டெஸ்ட் அணியின் கேய் டி அல்விஸ், நுவன் பிரதீப் ஆகியோர் தொடராக நான்கு இன்னிங்ஸ்களில் பூச்சியத்தில் ஆட்டமிழந்துள்ளனர்.

தொடராக நான்கு இன்னிங்ஸ்களில் ஓட்டங்கள் பெறாமல் ஆட்டமிழந்த உலக தர வரிசையில் இந்தியாவின் முன்னாள் வீரர் பங்காஜ் ரோய், நியுசிலாந்து முன்னாள் வீரர் லோவ்ரீ மில்லர் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் மார்க் வோ ஆகியோர் முன்னணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.