May 13, 2025 2:23:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை எதிர் இங்கிலாந்து: முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணிக்கு மோசமான ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, தினேஷ் சந்திமால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி ஜோ ரூட்ஸ் தலைமையில் களமிறங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் மொயின் அலி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுவரையில் 9 ஓவர்கள் பந்து வீசப்பட்டுள்ளதோடு, இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 23 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கடந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்த குசல் மென்டிஸ், இங்கிலாந்துடனான முதல் இன்னிங்ஸிலும் ஓட்டங்கள் பெறாத நிலையில ஆட்டமிழந்துள்ளார்.