February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புதிய வகை கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டவர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரென தகவல்

இலங்கையில் கிரிகிகெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஒருவரிடமே புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் இலங்கையில் கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடரொன்றுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி வீரர் ஒருவருக்கே புதிய வகை கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த வீரரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்க சுகாதார சேவைகள் பணியகம் தீர்மானித்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.