கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ, குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தின் 51 வீதமான பங்குகளை அரசாங்கம் வைத்துக்கொண்டு, 49 வீதமான பங்குகளையே இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் முதலீடு செய்வதற்காக வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முதலீட்டு வாய்ப்புகளே ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றியே முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.