ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளிலான அமைதி கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று கொழும்பில் நடத்தியுள்ளனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைமை சஜித் பிரேமதாச தலைமை தாங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராகவே இந்த அமைதி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.