February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரின் பெர்னாண்டோ மீதான ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை விமர்சித்திருந்த நிலையில் அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, பிரபாகரன் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் இவ்வாறான கருத்துக்கள், அவருக்கு வாக்களித்த மக்களையும் கவலையடையச் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.