January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நகரில் கருத்தோவியக் கண்காட்சி

இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இக்கண்காட்சியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது போன்று, தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் ஆகிய இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று அரசியல் கைதிகள் விடயத்திலும் அனைவரும் ஒருமித்து செயற்பட்டு, கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.