
அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாகக் கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியே, இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இன்று இவ்வாறான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.