May 24, 2025 14:06:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புதிய வகை கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்

File Photo: Facebook/ Bandaranaike International Airport

பிரிட்டன் உள்ளிட்ட  நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே புதிய வகை தொற்றுக்கு உள்ளானவர் தொடர்பாக தெரியவந்துள்ளதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொடர்பாக தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.