மேல் மாகாணத்தின் அவிசாவளை, தெஹியாகலை பிரதேசத்தில் அதிக விலை மதிப்புடைய 22 கிலோ எடையுடைய அரியவகை பளிங்கு மாணிக்கக் கல்லொன்று மீட்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் சுரங்கப் பணியாளர்களினால் குறித்த கல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஆராய்ந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபாரணங்கள் அதிகாரசபை, அந்தக் கல்லின் கரட் அளவு ஒரு இலட்சத்து 10 ஆயிரமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
குறித்த பளிங்கு மாணிக்கத்தின் உள்ளே நீர் குமிழி இருப்பதாகவும், இதனால் இதன் பெறுமதி மற்றைய மாணிக்கக் கற்களை விடவும் அதிகமானதாக இருக்குமெனவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபாரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்னும் இதன் பெறுமதி மதிப்பிடப்படவில்லை எனவும், இந்தக் கல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.