January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வண்டியும் தொந்தியும்” இணைய வழி தமிழ் நாடகம்

யாழ்ப்பாணத்தில் ‘வண்டியும் தொந்தியும் எனும் தமிழ் நாடகம் ஸும் செயலி மூலம் இன்றைய தினம் அரங்கேரவுள்ளது.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ‘செயல்திறன் அரங்க இயக்கம்’ தலைமையில் நகைச்சுவை பாங்கான இந்த நாடகத்தை இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு (Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021 ) பார்வையிட முடியும்.

செயல்திறன் அரங்க இயக்குநர் தே.தேவானந்தின் இயக்கத்தில் ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்துள்ளார்கள்.

கொரோனா நோய்த்தொற்று நிலைமைக் காலப்பகுதியில் பலதுறைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை நாடகத்துறை மற்றும் நாடகக்கலைஞர்களும் பாதிக்கப்பட்டனர்..

இந்த சூழ்நிலையில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியை பயன் படுத்தும் எண்ணம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகி உள்ளது.

அதற்கமைய தமிழ் நாடகங்களையும் நிகழ்த்தமுடியாத நிலை இருந்தாலும் நாடக உலகில் முதன் முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.