தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கே இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த விடயத்தில் அரசாங்கத்தினால் கொள்கை ரீதியில் அதனை வழங்குமாறு வலியுறுத்த முடியுமே தவிர அது தொடர்பாக தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளம் மற்றும் அரசாங்க தரப்பினருக்கிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் இது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் அது தொடர்பாக தொழில் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.