பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரின், பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி, கேட்டுக்கொண்டிருந்தார். அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினுள் ஹரின் பெர்னாண்டோவுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விடயங்களில் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கும் ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டிய நிலை ஏற்படும் என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு கடுமையான உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின், நேற்று பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் உள்ளக பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.