June 15, 2025 12:26:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தொடர் உபாதைகளையடுத்து புதிய உடற்திறன் மேம்பாட்டு முகாமையாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உடற்திறன் மேம்பாட்டு முகாமையாளராக கிராண்ட் லியுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அண்மைக் காலமாக பல்வேறு உபாதைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வீரர்களின் தேகாரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கிராண்ட் லியுடன் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களின் உடல் வலிமை மற்றும் தேகாரோக்கியத்தை பலப்படுத்தும் துறைசார் நிபுணரான லியுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்திறன் மேம்பாட்டு முகாமையாளராக இன்று முதல் செயற்படவுள்ளார்.

வீரர்களின் தேகாரோக்கியத்தை மேம்படுத்துவதில் கண்டிப்பான பயிற்றுவிப்பாளராக லியுடன் கருதப்படுகின்றார்.

அவர் இதற்கு முன்னர் பாகிஸ்தான், பங்களாதேசம் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற அணிகளுக்காக பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.