இலங்கையர்களுக்கு கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதற்கு எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மூலோபாய மற்றும் தடுப்பூசி திட்டத்திற்கான கொவிட்- 19 ஜனாதிபதி செயலணிக்கு, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக லலித் வீரதுங்க தலைமை தாங்குகின்றார்.
மேஜர். ஜெனரல் சஞ்சவீவ முனசிங்க, டாக்டர். அமல் ஹர்ஷா டி சில்வா, கே.ஆர். உடுவாவெல, ஜெனரல் ஷவேந்திர சில்வா, டாக்டர். பிரசன்ன குணசேன, டாக்டர் அனுருத்த பதேனிய மற்றும் டாக்டர். அசேல குணவர்தன ஆகியோர் இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குப் பொருத்தமான தடுப்பூசியைத் தெரிவுசெய்து, விரைவாக கொள்வனவு செய்து, மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே இந்த செயலணியின் முக்கிய பொறுப்பாகும்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க இந்த செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.