May 24, 2025 15:47:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு : தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறக்கப்படுவதால் தாழ் நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

படிப்படியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதற்கமைய பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாகச் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.