
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்கள், நிறுவனங்கள்மற்றும் வர்த்க நிலையங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதனை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று முதல் மேல் மாகாணத்தில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களுக்கு வருகை தரும் அனைத்து நபர்களின் பதிவையும் பராமரிப்பது கட்டாயமாகும், அத்துடன் கைகளை கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல், வெப்பநிலையை சரிபார்த்தல் தொழிலாளர்களுக்கான வளாகத்தில் சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றை உறுதிசெய்தல் வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் சட்டதிட்டங்களை மீறும் அலுவலகங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.