
Photo Facebook/ Vasudeva Nanayakkara
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்தள்ளார்.
இதன்படி இலங்கையில் இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது
இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.